செய்திகள்
சுகாதாரப்பணியாளர்களுடன் கொரோனா நோயாளிகள் கர்பா நடனம் ஆடிய காட்சி.

சிகிச்சை மையத்தில் ‘கர்பா’ நடனமாடிய கொரோனா நோயாளிகள்

Published On 2020-10-21 03:29 GMT   |   Update On 2020-10-21 03:29 GMT
மும்பையில் சிகிச்சை மையத்தில் கொரோனா நோயாளிகள் கர்பா நடனமாடிய வீடியோ சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை:

நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. எனவே நவராத்திரியையொட்டி பொதுமக்கள் கூட்டமாக கர்பா, தான்டியா நடனமாடுவதை தவிர்த்து மருத்துவ முகாம், ரத்த தான முகாம்களை நடத்த அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்தநிலையில் மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள மாநகராட்சி கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகள், சுகாதாரப்பணியாளர்களுடன் கர்பா நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில் ஒரு வீடியோவில் பெண் நோயாளிகளும், மற்றொரு வீடியோவில் ஆண் நோயாளிகளும் பி.பி.இ. உடை அணிந்து உள்ள சுகாதாரப்பணியாளர்களுடன் நடனமாடுகின்றனர்.

இந்த வீடியோ குறித்து மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் கூறியதாவது:-

சிகிச்சை மைய டீன் நடன நிகழ்ச்சி எதற்கும் ஏற்பாடு செய்யவில்லை என கூறினார். நோயாளிகள் அவர்களாகவே சுகாதாரப்பணியாளர்களுடன் கர்பா நடனமாடி நவராத்திரியை கொண்டாடி உள்ளனர். இதனால் அவர்கள் மகிழ்ச்சியாகவும், நன்றாகவும் இருப்பதாக உணர்ந்து உள்ளனர். நோயாளிகளுக்கு மகிழ்ச்சியை தந்ததால் அவர்கள் நடனமாட உள்ளே இருந்த டாக்டர் அனுமதித்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News