செய்திகள்
பிரம்ம கமலம் பூ பூத்திருப்பதை படத்தில் காணலாம்.

ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ பூத்தது

Published On 2021-10-24 08:41 GMT   |   Update On 2021-10-24 08:41 GMT
பவுர்ணமி சமயங்களில் இரவு நேரங்களில் மலர்ந்து அடுத்த நாள் வாடிப் போய்விடும் பிரம்ம கமலம் பூ.
பல்லடம்:

பிரம்மனின் நாடிக் கொடி என வர்ணிக்கப்படும் பிரம்மகமலம் பூவை நிஷா காந்தி பூ என்றும் அழைப்பார்கள், பிரம்மாவிற்கு படைக்கப்படும் பூ என்றும் அதனால் பிரம்ம கமலம் என்று பெயர் வந்தது என்றும் கூறுவார்கள்.  இந்தப் பூ ஆண்டுக்கு ஒரே ஒருமுறை மட்டும் மலரும்.

பவுர்ணமி சமயங்களில் இரவு நேரங்களில் மலர்ந்து அடுத்த நாள் வாடிப் போய்விடும். ஒரே ஒருநாள் மட்டும் தான் பூ மலர்ந்து இருக்கும் இந்தப் பூவின் நறுமணம் பூச்செடி உள்ளபகுதி முழுவதும் வீசும் தன்மை உடையது, இந்தநிலையில் பல்லடம் மங்கலம் ரோடு சுப்பையன் என்பவரது வீட்டில் இந்த பிரம்ம கமலம் பூ வளர்க்கப்பட்டு வந்தது.

அதில் பூக்கள் பூத்தன.வெளிர் வண்ணத்தில் நறுமணத்துடன் பூத்த பிரம்ம கமலம் பூக்களை அக்கம்பக்கத்தினர் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்வதாக சுப்பையன்கூறினார்.

Tags:    

Similar News