செய்திகள்
கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் இதுவரை 23 ஆயிரம் குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு

Published On 2020-09-25 02:51 GMT   |   Update On 2020-09-25 02:51 GMT
தமிழகத்தில் 12 வயதுக்கு உட்பட்ட 23 ஆயிரத்து 22 குழந்தைகள் இதுவரை கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,089 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
சென்னை :

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 88 ஆயிரத்து 784 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,546 ஆண்கள், 2,146 பெண்கள் என மொத்தம் 5,692 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 13 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 109 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 653 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,089 பேரும், கோவையில் 642 பேரும், சேலத்தில் 311 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 21 பேரும், ராமநாதபுரத்தில் 16 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 66 லட்சத்து 8 ஆயிரத்து 675 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 5 லட்சத்து 63 ஆயிரத்து 691 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 23 ஆயிரம் குமுந்தைகள் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 43 பேரும், தனியார் மருத்துவமனையில் 23 பேரும் என 66 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதுவரையில் தமிழகத்தில் 9 ஆயிரத்து 76 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 470 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,005 பேரும், கோவையில் 613 பேரும், கடலூரில் 514 பேரும் அடங்குவர். இதுவரையில் 5 லட்சத்து 8 ஆயிரத்து 210 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 46 ஆயிரத்து 405 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News