செய்திகள்
கொரோனா வைரஸ்

நெல்லையில் புதிய உச்சமாக இன்று 523 பேருக்கு கொரோனா

Published On 2021-04-24 08:15 GMT   |   Update On 2021-04-24 08:15 GMT
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் எடுக்கப்பட்ட 2,382 பரிசோதனையில் 2 பேருக்கு திரும்பவும் தொற்று உறுதியாகி உள்ளது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 400-க்கும் மேலாகவே இருந்து வந்தது.

முதல் முறையாக தினசரி பாதிப்பு நேற்று 500-ஐ தாண்டியது. இந்நிலையில் புதிய உச்சமாக இன்று 523 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் எடுக்கப்பட்ட 2,382 பரிசோதனையில் 2 பேருக்கு திரும்பவும் தொற்று உறுதியாகி உள்ளது.

மாநகர பகுதியில் பாளை, மேலப்பாளையம் மண்டலங்களில் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் மாநகர பகுதிகளில் 260 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அப்பகுதிகளில் கிருமி நாசினி, பிளிச்சிங் பவுடர் தூவுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து சுகாதார துறையினரால் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இன்றும் மாநகர பகுதியில் 200-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் பேட்டை, சங்கர் நகர், அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்கள் சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வண்ணார்பேட்டை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஒரு ஊழியர், சேரன் மகாதேவி கொரோனா சிகிச்சை முகாமில் ஊழியர் ஒருவர், பாளை ஆயுதப் படை போலீஸ் குடியிருப்பில் ஒரே வீட்டில் 2 பேர், பணகுடி இஸ்ரோ வளாகத்தில் ஒருவர், வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ் காரர் ஒருவரும் பாதிக்கப்பட்டு உள்ளார்.

இது தவிர காவல்கிணறு, வடுகச்சி மதில், செட்டிமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஏராளமானோருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

கூடங்குளம் அணுமன் நிலைய ஊழியர்கள், துணை போலீஸ் கமி‌ஷனர் குடியிருப்பில் பணிபுரியும் போலீஸ்காரர், ரெட்டியார் பட்டி, உடையார் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒரே வீட்டில் வசிப்பவர்கள் என தொற்று பரவலாக ஏற்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3,300 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை சிகிச்சை முடிந்து 17,194 பேர் வீடு திரும்பி உள்ளனர். 227 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Tags:    

Similar News