செய்திகள்

நாகர்கோவிலில் 2¼ கிலோ கஞ்சாவுடன் 3 வாலிபர்கள் கைது

Published On 2018-11-09 17:16 GMT   |   Update On 2018-11-09 17:16 GMT
நாகர்கோவிலில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 2¼ கிலோ கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து பின்னணியில் உள்ள கும்பல் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் நாகர் கோவில் உள்பட பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

இதைத் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் போலீசாருக்கு உத்தர விட்டுள்ளார். போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கஞ்சா கும்பலை கைது செய்து வருகிறார்கள்.

வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெனட் சேவியர் தலைமையிலான போலீசார் வடசேரியில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக 3 பேர் நின்று கொண்டிருந்தனர்.

போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் பெயர் கிருஷ்ணன் கோவிலைச் சேர்ந்த சபரி (வயது20), செந்தில்குமார் (34), அருகுவிளையைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணா (32) என்பது தெரிய வந்தது.

அவர்களிடம் 2 ¼ கிலோ கஞ்சா இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு பின்னணியில் உள்ள கஞ்சா கும்பல் பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News