ஆன்மிகம்
ராசிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

ராசிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

Published On 2021-03-15 03:37 GMT   |   Update On 2021-03-15 03:37 GMT
ராசிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கங்கணம் கட்டுதல், சக்தி கரகம் எடுத்தல் மற்றும் தீமிதி விழா நடந்தது. இதில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் தீ மிதித்தனர்
ராசிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் அபிஷேகம், சக்தி அழைத்தல், சாமி ஊஞ்சல் ஆடுதல், பந்த பலியிடுதல், பூ வாங்குதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

நேற்று காலையில் கங்கணம் கட்டுதல், சக்தி கரகம் எடுத்தல் மற்றும் தீமிதி விழா நடந்தது. ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் தீ மிதித்தனர். ஒரு சில பக்தர்கள் தங்கள் கைக்குழந்தையுடன் பயபக்தியுடன் தீ மிதித்தனர். தீ மிதித்த பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து வந்திருந்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) சாமி ஊர்வலம் நடக்கிறது. நாளை (திங்கட்கிழமை) மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Tags:    

Similar News