வழிபாடு
சீர்காழி தர்மராஜா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

சீர்காழி தர்மராஜா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

Published On 2022-02-05 08:56 GMT   |   Update On 2022-02-05 08:56 GMT
சீர்காழி அருகே செம்மங்குடி கிராமத்தில் உள்ள தர்மராஜா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மாரியம்மன் வீதிஉலா காட்சி நடைபெற்றது.
சீர்காழி அருகே செம்மங்குடி கிராமத்தில் தர்மராஜா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு நேற்று தீமிதி திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 26-ந் தேதி கொடி ஏற்றப்பட்டு காப்பு கட்டி தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு காலை காளியம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வரப்பட்டு மதியம் மாரியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனை தொடர்ந்து நேற்று மாலை கோவிலின் முன்பு அமைக்கப்பட்ட தீ குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து நேற்று இரவு மாரியம்மன் வீதிஉலா காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணிகளில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News