தொழில்நுட்பம்
ரியல்மி 5 டீசர்

5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, நான்கு பிரைமரி கேமராவுடன் பட்ஜெட் விலையில் களமிறங்கும் ரியல்மி 5

Published On 2019-08-16 04:29 GMT   |   Update On 2019-08-16 04:29 GMT
ரியல்மி பிராண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரியல்மி 5 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, நான்கு பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.



ரியல்மி பிராண்டு இந்தியாவில் ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஆகஸ்ட் 20 ஆம் தேதி அறிமுகமாக இருக்கும் நிலையில், ரியல்மி 5 ஸ்மார்ட்போனின் புதிய டீசர் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியானது.

அதில் ரியல்மி 5 ஸ்மார்ட்போன் நான்கு கேமராவும், பிரைமரி கேமராவுடன் f/1.8 அப்ரேச்சர் மற்றும் 1.25μm பிக்சல், 119-டிகிரி அல்ட்ரா-வைடு லென்ஸ், சூப்பர் மேக்ரோ மற்றும் டெப்த் சென்சிங் போர்டிரெயிட் லென்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.



இதுவரை வெளியான ரியல்மி ஸ்மார்ட்போன்களிலேயே ரியல்மி 5 ஸ்மார்ட்போனிற்கு அதிக திறன் கொண்ட பேட்டரி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி 3 ஸ்மார்ட்போனில் 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ள நிலையில், ரியல்மி 5 ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது.

மேலும் ரூ. 10,000 விலைக்குள் கிடைக்கும் நான்கு கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போன் மாடலாக ரியல்மி 5 இருக்கும் என ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்தார்.



இதுதவிர இந்தியாவில் வெளியாகும் ஸ்மார்ட்போன்களிலேயே புதிய ரியல்மி 5 சக்திவாய்ந்த குவால்காம் சிப்செட் கொண்டிருக்கும் என தெரிகிறது. அந்த வகையில் புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 655 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ரியல்மி 5 ஸ்மார்ட்போனுடன் அறிமுகமாகும் ரியல்மி 5 ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர், VOOC ஃபிளாஷ் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News