தொழில்நுட்பம்
மைக்ரோசாப்ட் டீம்ஸ்

ஒரே சமயத்தில் 250 பேருடன் க்ரூப் கால் மேற்கொள்ளும் வசதியை வழங்கும் மைக்ரோசாப்ட்

Published On 2020-05-06 06:51 GMT   |   Update On 2020-05-06 06:51 GMT
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டீம்ஸ் க்ரூப் கால் சேவையில் ஒரே சமயத்தில் 250 பேருடன் க்ரூப் கால் மேற்கொள்ளும் வசதி வழங்கப்பட இருக்கிறது.



மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவையின் க்ரூப் கால் அம்சத்தில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை 250 ஆக உயர்த்தப்பட இருக்கிறது. தற்சமயம் இந்த சேவையில் அதிகபட்சம் 100 பேருடன் உரையாட முடியும். இந்த எண்ணிக்கை வரும் வாரங்களில் அதிகப்படுத்தப்பட இருக்கிறது.

இதன் மூலம்  கூகுள் மீட் மற்றும் ஜூம் உள்ளிட்ட சேவைகளுடனான போட்டியை எதிர்கொள்ள மைக்ரோசாப்ட் டீம்ஸ் முடிவு செய்துள்ளது. இரு சேவைகளிலும் தற்சமயம் ஒரே சமயத்தில் 100 பேருடன் க்ரூப் கால் பேசும் வசதி வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வீடியோ கான்பரன்சிங் சேவைக்கான பயன்பாடு பலமடங்கு அதிகரித்துள்ளது.



முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் சேவையை உலகம் முழுக்க சுமார் 7.5 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார். 

மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவைக்கான ரோட்மேப் பகுதியில் அந்நிறுவனம் க்ரூப் கால் எண்ணிக்கையை 250 ஆக உயர்த்த இருப்பதை தெரிவித்து இருக்கிறது. சந்தா செலுத்தி டீம்ஸ் சேவையை பயன்படுத்தும் அனைவருக்கும் விரைவில் இந்த அம்சம் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

டீம்ஸ் சேவையை இலவசமாக பயன்படுத்துவோர் தற்சமயம் அதிகபட்சமாக 20 பேருடன் க்ரூப் கால் பேசும் வசதி வழங்கப்பட்டுள்ளது. க்ரூப் கால் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது மட்டுமின்றி மீட்டிங்களை ஷெட்யூல் செய்வது, மீட்டிங் ரெக்கார்டிங், போன் கால், ஆடியோ கான்பரன்சிங் உள்ளிட்ட வசதிகள் சந்தா செலுத்துவோருக்கு வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News