இந்தியா
வலியநடை பந்தலில் அய்யப்பசாமியை தரிசிக்க காத்திருந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

சபரிமலை ஐயப்பன் கோவில் வருமானம் ரூ.110 கோடியை தாண்டியது

Published On 2022-01-10 03:20 GMT   |   Update On 2022-01-10 03:20 GMT
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜையையொட்டி சீசன் தொடங்கிய நாள் முதல் இதுவரை நடை வருமானம் ரூ.110 கோடியை கடந்துள்ளது.
திருவனந்தபுரம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையையொட்டி, சன்னிதானத்தில் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் செயல் அதிகாரி கிருஷ்ணகுமார வாரியர், விழா கட்டுப்பாட்டு அலுவலர் உப்பிலியப்பன், துணை செயல் அலுவலர் கணேசன் போற்றி உள்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு அனந்தகோபன் நிருபர்களிடம் கூறுகையில், மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு நடை திறக்கப்பட்ட கடந்த 8 நாட்களில் சபரிமலையில் ரூ.25.18 கோடி வருமானம் கிடைத்துள்ளது. மண்டல, மகரவிளக்கு பூஜையையொட்டி சீசன் தொடங்கிய நாள் முதல் இதுவரை நடை வருமானம் ரூ.110 கோடியை கடந்துள்ளது.
Tags:    

Similar News