ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி எக்ஸ்.எல்.6

பண்டிகை கால விற்பனையில் அசத்திய மாருதி சுசுகி

Published On 2019-11-05 10:18 GMT   |   Update On 2019-11-05 10:18 GMT
அக்டோபர் 2019 மாத விற்பனையில் மாருதி சுசுகி நிறுவனம் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.



அக்டோபர் 2019 மாத காலத்தில் மாருதி சுசுகி நிறுவன வாகன விற்பனை அதிகரித்துள்ளது. இது முந்தைய மாத்தை விட 4.5 சதவிகிதம் அதிகம் ஆகும். 

முந்தைய மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் மொத்தம் 1.53 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இதில் 1.41 லட்சம் யூனிட்கள் உள்நாட்டிலும், 9,158 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மாருதி சுசுகி வாகன விற்பனையில் யு.வி. பிரிவு 11.3 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

யு.வி. பிரிவில் விடாரா பிரெஸா, எர்டிகா எம்.பி.வி., எக்ஸ்.எல்.6 பிரீமியம் எம்.பி.வி. மற்றும் எஸ் கிராஸ் போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன. மாருதி சுசுகி வாகன விற்பனைக்கு தீபாவளி பண்டிகை முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இத்துடன் பல்வேறு தள்ளுபடி மற்றும் சலுகைகளும் வழங்கப்பட்டன.



மாருதி நிறுவனம் கடந்த மாதம் எஸ் பிரெஸ்ஸோ மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் அறிமுகமான முதல் இரு மாதங்களில் 10,000 யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. மாருதி நிறுவனத்தின் முதல் பி.எஸ். 6 ரக வாகனமாக எஸ் பிரெஸ்ஸோ இருக்கிறது. 

மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ மாடல் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இது ஆல்டோ கே10 மாடலில் வழங்கப்பட்டதை விட மேம்பட்ட என்ஜின் ஆகும். இதே என்ஜின் மற்ற என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News