ஆன்மிகம்
தேங்காய்களால் உருவான 21 அடி உயர சிவலிங்கம்

தேங்காய்களால் உருவான 21 அடி உயர சிவலிங்கம்

Published On 2021-03-11 06:05 GMT   |   Update On 2021-03-11 06:05 GMT
மைசூரு டவுனில் ஆலனஹள்ளியை சேர்ந்த பிரம்மாகுமாரிஸ் ஆசிரமத்தில் சுமார் 8 ஆயிரம் தேங்காய்களால் 21 அடி உயரமும், 12 அடி அகலத்திற்கு சிவலிங்கம் அமைக்கப்பட்டு உள்ளது.
மகாசிவராத்திரி விழா இந்தியா முழுவதும் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மைசூரு டவுனில் ஆலனஹள்ளியை சேர்ந்த பிரம்மாகுமாரிஸ் ஆசிரமத்தில் தேங்காய்களால் 21 அடி உயர சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 8 ஆயிரம் தேங்காய்களால் 21 அடி உயரமும், 12 அடி அகலத்திற்கு இந்த சிவலிங்கம் அமைக்கப்பட்டு உள்ளது.

சிவராத்திரியையொட்டி இந்த சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும், ஒரு வாரத்திற்கு பொதுமக்கள் இலவசமாக வந்து சிவலிங்கத்தை தரிசிக்கலாம் என்றும், போலீசார் அனுமதி கொடுத்தால் பக்தர்கள் தரிசிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்று பிரம்மகுமாரிஸ் ஆசிரமத்தினர் தெரிவித்தனர். இந்த சிவலிங்கத்தை வடிவமைக்க ரூ.4 லட்சம் செலவானதாக கூறப்படுகிறது. தற்போது இந்த சிவலிங்கத்தை தரிசிக்க மைசூரு மாவட்ட மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். மேலும் 21 அடி உயர சிவலிங்கம் முன்பு புகைப்படம் எடுத்து பக்தர்கள் மகிழ்ந்து வருகிறார்கள்.
Tags:    

Similar News