தொழில்நுட்பம்
டெக்னோ போன்

ரூ. 7999 விலையில் 7 இன்ச் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2020-07-31 04:55 GMT   |   Update On 2020-07-31 04:55 GMT
டெக்னோ பிராண்டின் புதிய ஸ்பார்க் 6 ஏர் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

டிரான்சிஷன் இந்தியா நிறுவனம் டெக்னோ ஸ்பார்க் 6 ஏர் ஸ்மார்ட்போன் மற்றும் எம்1 ட்ரூ வயர்லெஸ் சிங்கிள் இயர்பட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது.

புதிய டெக்னோ ஸ்பார்க் 6 ஏர் ஸ்மார்ட்போனில் 7 இன்ச் ஹெச்டி பிளஸ் டாட் நாட்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர், 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, ஏஐ கேமரா, குவாட் எல்இடி ஃபிளாஷ் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டு உள்ளது.



டெக்னோ ஸ்பார்க் 6ஏர் சிறப்பம்சங்கள்

- 7 இன்ச் 1640X720பிக்சல் ஹெச்டி பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர்
- IMG பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
- 2 ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைஒஎஸ் 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8
- 2 எம்பி டெப்த் சென்சார், ஏஐ கேமரா, குவாட் எல்இடி ஃபிளாஷ்
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, டூயல் எல்இடி ஃபிளாஷ்
- பின்புறம் கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்
- மைக்ரோ யுஎஸ்பி
- 6000 எம்ஏஹெச் பேட்டரி

டெக்னோ ஸ்பார்க் 6 ஏர் ஸ்மார்ட்போன் கொமெட் பிளாக் மற்றும் ஓசன் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 7999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

டெக்னோ மினிபாட் எம்1 ட்ரூ வயர்லெஸ் சிங்கிள் இயர்பட் ப்ளூடூத் 5.0, என்விரான்மென்ட்டல் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இத்துடன் டச் கண்ட்ரோல்கள், ஐபிஎக்ஸ்4 தர சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஒருமுறை சார்ஜ் செய்தால் 6 மணி நேரத்திற்கு பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் இயர்பட் 50 எம்ஏஹெச் பேட்டரியும் சார்ஜிங் கேஸ் 110 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது. டெக்னோ மினிபாட் எம்1 வைட் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News