செய்திகள்
ராகுல் காந்தி

கடவுள் ஸ்ரீ ராமர் பெயரில் ஏமாற்றுவது அநீதி - ராகுல் காந்தி

Published On 2021-06-14 13:25 GMT   |   Update On 2021-06-14 13:25 GMT
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஏற்படுத்தப்பட்ட ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை நிலம் வாங்கியதில் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதுடெல்லி:

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

இந்தநிலையில்  அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஏற்படுத்தப்பட்ட ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை நிலம் வாங்கியதில் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அறக்கட்டளை பெயரில் ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி வசூலித்து வரும் நிலையில் அறக்கட்டளை பெயரில் நிலம் வாங்கியுள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து 
சிபிஐ
 விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.



ஆனால் இந்த மோசடி புகார்களை ராமஜென்மபூமி அறக்கட்டளை நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக அறக்கட்டளையின் சம்ப்ராத் வெளியிட்ட அறிக்கையில், ராமர் கோவிலுக்கான நிலம் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டது. ஏற்கனவே நிலத்தின் உரிமையாளர்கள் விற்ற நிலத்துக்கு பதிவுதான் அன்றைய தினம் செய்தனர் என விளக்கம் அளித்திருக்கிறார். 

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில்,

கடவுள் ஸ்ரீ ராமர் என்பவர் நீதி, உண்மைக்கு நிகரானவர். அவரது பெயரில் ஏமாற்றுவது அநீதி என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News