தொழில்நுட்பம்
நின்டென்டோ

ஸ்மார்ட்போன்களுக்கான ஏ.ஆர். கேம்களை உருவாக்கும் நின்டென்டோ

Published On 2021-03-25 04:33 GMT   |   Update On 2021-03-25 04:33 GMT
நின்டென்டோ நிறுவனம் போக்கிமான் கோ உருவாக்கிய நிறுவனத்துடன் இணைந்து ஸ்மார்ட்போன்களுக்கான ஏ.ஆர். கேம்களை உருவாக்குகிறது.


ஜப்பான் நாட்டை சேர்ந்த முன்னணி கேம் தயாரிப்பு நிறுவனமான நின்டென்டோ அமெரிக்காவை பூர்விகமாக கொண்டு இயங்கி வரும் நியான்டிக் நிறுவனத்துடன் கூட்டணி அமைக்கிறது. நியான்டிக் நிறுவனம் ஸ்மார்ட்போன்களில் அதிக பிரபலமான போக்கிமான் கோ கேமை உருவாக்கி இருக்கிறது. 

இரு நிறுவனங்கள் இணைந்து ஸ்மார்ட்போன்களுக்கான ஆக்மெனடெட் ரியாலிட்டி கேம்களை உருவாக்க இருக்கின்றன. இரண்டு முன்னணி நிறுவனங்ள் கூட்டணியில் உருவாகும் முதல் கேம் பிக்மின் கதாபாத்திரங்களை கொண்டிருக்கும் என்றும் இந்த கேம் 2021 இறுதிக்குள் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 



ஆக்மென்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் புகைப்படங்கள் மற்றும் அனிமேஷன் காட்சிகள் நிஜ உலகில் நேரில் பார்ப்பது போன்ற தோற்றத்தை ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா வழியே காண்பிக்கும். இதன் காரணமாகவே போக்கிமான் கோ உலகம் முழுக்க அதிகளவு வரவேற்பை பெற்றது. 

பிக்மின், சூப்பர் மேரியோ மற்றும் டான்கி காங் போன்ற பிரபல நின்டென்டோ கதாபாத்திரங்களை உருவாக்கிய மியாமோடோ புதிய செயலி நடபத்தை மகிழ்வான காரியமாக மாற்றும் வகையில் இருக்கும் என தெரிவித்தார். 
Tags:    

Similar News