ஆட்டோமொபைல்
பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ ஷேடோ எடிஷன்

இந்தியாவில் 3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ ஷேடோ எடிஷன் அறிமுகம்

Published On 2020-08-20 10:57 GMT   |   Update On 2020-08-20 10:57 GMT
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ ஷேடோ எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

ஜெர்மன் நாட்டு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ இந்தியாவில் 330ஐ கிரான் டூரிஸ்மோ ஷேடோ எடிஷன் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 42.50 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. 

இதன் பெட்ரோல் வேரியண்ட் சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. புதிய 3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ ஷேடோ எடிஷன்-ஆல்பைன் வைட், மெல்போன் ரெட் மெட்டாலிக், பிளாக் சஃபையர் மெட்டாலிக் மற்றும் எஸ்டோரில் புளூ மெட்டாலிக் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.



பிஎம்டபிள்யூ 330ஐ கிரான் டூரிஸ்மோ ஷேடோ எடிஷன் மாடலில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 248 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் ஸ்போர்ட் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 

மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ ஷேடோ எடிஷனில் 6 ஏர்பேக்குகள், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட வசதி, டைனமிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், டைனமிக் டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
Tags:    

Similar News