ஆட்டோமொபைல்

2019 ஹோன்டா சிவிக் கார் இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-03-08 06:34 GMT   |   Update On 2019-03-08 06:34 GMT
இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2019 சிவிக் கார் மாடலை ஹோன்டா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. #2019HondaCivic
இந்தியாவில் பத்தாவது தலைமுறை ஹோன்டா சிவிக் கார் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சிவிக் கார் விலை இந்தியாவில் ரூ.17.70 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ.22.30 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஹோன்டா சிவிக் கார் இந்திய சந்தையில் ஏழு ஆண்டுகளுக்கு பின் அறிமுகமாகியுள்ளது. புத்தம் புதிய சிவிக் கார் புதுவித தொழில்நுட்பம் மற்றும் செயல்திறன் வழங்குகிறது. 2019 ஹோன்டா சிவிக் முன்னதாக 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய ஹோன்டா சிவிக் காரில் இம்முறை டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. ஹோன்டா சிவிக் காரில் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. காரின் முன்பக்கம் ஆங்குளர் பம்ப்பர் மற்றும் எல்.இ.டி. ஹெட்லேம்ப்களை கொண்டிருக்கிறது. பின்புறம் சி வடிவம் கொண்ட எல்.இ.டி. டெயில்லைட்களுடன் ஃபாஸ்ட்பேக் ரூஃப்லைன் வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் 5-ஸ்போக் கொண்ட 17-இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டிருக்கிறது.



2019 ஹோன்டா சிவிக் காரில் 7.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் க்ரூஸ் கண்ட்ரோல், 8-வழிகளில் ஓட்டுனர் இருக்கையை மாற்றிக் கொள்ளும் வசதி, எலெக்ட்ரிக் சன்ரூஃப், டூயல்-சோன் கிளைமேட் கண்ட்ரோல், ஸ்மார்ட் கீ என்ஜின் ஆன் மற்றும் ஆஃப் வசதி வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வசதிகளை பொருத்தவரை ஆறு ஏர்-பேக், ஏ.பி.எஸ்., இ.பி.டி., அகைள் ஹேண்ட்லிங் அசிஸ்ட், ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், கேமரா அசிஸ்ட், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஹோன்டா சிவிக் மாடலில் 1.8 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 139 பி.ஹெச்.பி. @6500 ஆர்.பி.எம்., 174 என்.எம். டார்க் @4300 ஆர்.பி.எம். வழங்குகிறது. இத்துடன் முதல் முறையாக சிவிக் மாடலில் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் புதிய சிவிக் மாடலில் 1.6 லிட்டர் i-DTEC டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 118 பி.ஹெச்.பி. @4000 ஆர்.பி.எம்., 300 என்.எம். டார்க் @2000 ஆர்.பி.எம். வழங்குகிறது. பெட்ரோல் என்ஜின் சி.வி.டி. யூனிட் கொண்டிருக்கும் நிலையில், டீசல் வேரியண்ட் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
Tags:    

Similar News