உள்ளூர் செய்திகள்
பொங்கல் விழா

கோவை பழங்குடியின கிராமத்தில் நடனமாடி பொங்கல் கொண்டாடிய பெண்கள்

Published On 2022-01-12 09:47 GMT   |   Update On 2022-01-12 09:47 GMT
சிறுவர்கள், பெரியவர்கள், பெண்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
காரமடை:

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பில்லூர் அணை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சொரண்டி, மேல்குறவன் கண்டி, கீழ்குறவன் கண்டி, புதுக்காடு, கூடப்பட்டி உள்ளிட்ட 15-க் கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன.
 
இங்கு பழங்குடியின மக்கள் அதிகமாக வசித்து வரும் நிலையில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை வலுப்படுத்தும் விதமாக பொங்கல் விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது.

காரமடை காவல்துறை மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து பழங்குடியின மக்களுக்கு அரிசி, பருப்பு, போர்வை, மளிகை பொருட்கள் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங் களை ரூ.3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பொங்கல் விழாவை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர்.

சொரன்டை கிராமத்தில் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில் அங்குள்ள பழங்குடியின கிராம மக்கள் புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கல் வைத்தும், தங்களது பழங்குடியின இசை கருவிகளை இசைத்து நடனமாடியும் பொங்கல் விழாவை கொண்டாடினர்.

இதனை தொடர்ந்து சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என அனை வருக்கும் தனித்தனியாக ஓட்டப்பந்தயம்,சாக்கு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திராளன பழங்குடியின கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News