செய்திகள்
எடப்பாடி பழனிசாமி - ஜிகே வாசன்

எடப்பாடி பழனிசாமியை இன்று ஜி.கே.வாசன் சந்திக்கிறார்- தொகுதிப்பங்கீடு உறுதியாக வாய்ப்பு

Published On 2021-03-05 05:45 GMT   |   Update On 2021-03-05 05:45 GMT
தற்போதைய கூட்டணி சூழலில் த.மா.கா.வுக்கு 5 தொகுதிகள் வரை தரமுடியும் என்று அ.தி.மு.க. தரப்பில் கூறி உள்ளனர்.
சென்னை:

அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக த.மா.கா. துணைத்தலைவர் கோவைதங்கம் தலைமையிலான குழுவினர் அ.தி.மு.க. குழுவினருடன் 2-கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

த.மா.கா. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்று சைக்கிள் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். அதை மனதில் வைத்து 12 தொகுதிகளை த.மா.கா. கேட்டு வருகிறது.

ஆனால் தற்போதைய கூட்டணி சூழலில் 5 தொகுதிகள் வரை தரமுடியும் என்று அ.தி.மு.க. தரப்பில் கூறி உள்ளனர்.

இது தொடர்பாக த.மா.கா. நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது 5 தொகுதிகள் என்றால் கட்சியின் செயல்பாடுகள் பாதிக்கும். குறைந்தபட்சம் தென்மாவட்டம், கொங்கு மண்டலம், டெல்டா மாவட்டங்கள், சேலம் மண்டலம், சென்னை ஆகியவற்றில் பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் 10 தொகுதிகளாவது வாங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

ஆனால் அ.தி.மு.க. 5-க்கு மேல் நகருமா என்பது தெரியவில்லை. இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும் இன்று இரவு சந்தித்து பேச முடிவு செய்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையின்போது தொகுதிப்பங்கீடு உறுதியாகும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News