செய்திகள்
ஜிகே வாசன்

பொங்கல் போனஸ் அறிவித்த தமிழக அரசுக்கு ஜிகே வாசன் பாராட்டு

Published On 2021-01-05 08:10 GMT   |   Update On 2021-01-05 08:11 GMT
பொங்கல் போனஸ் அறிவித்த தமிழக அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறிவித்துள்ள போனஸ் மற்றும் பரிசுத் தொகை பெரிதும் பயன் தரும்.

குறிப்பாக அரசு சி, டி பிரிவு ஊழியர்களுக்கு ரூ. 3,000 தற்காலிக மிகை ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.

அரசு சி, டி பிரிவைச் சேர்ந்த தற்காலிக மற்றும் நிரந்தர பணியாளர்கள், உள்ளாட்சிமன்றப் பணியாளர்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு தற்காலிக போனஸ் வழங்கப்படும் என்பதால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

மேலும் மாத அடிப்படையில் ஊதியம் பெற்று வரும் பணியாளர்கள், சத்துணவு திட்டப்பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள் போன்றோருக்கு தற்காலிக மிகை ஊதியமாக ரூ. 1,000 வழங்கப்படுவதும் பயனளிக்கும்.

அதே போல ஓய்வூதியம் பெறும் சத்துணவு அமைப்பாளர்கள், சமையல் உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் போன்ற தனி ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் போன்றோருக்கு பொங்கல் பரிசுத் தொகை ரூ. 500 வழங்கப்படுவதும் பயனளிக்கும்.

போனஸ் மற்றும் பொங்கல் பரிசுத் தொகை கொரோனா காலத்திலும், புயல் மழையாலும் பாதிக்கப்பட்டிருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும்.

எனவே தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்காக அறிவித்திருக்கும் போனஸ், பரிசுத் தொகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் தமிழக மக்களுக்கு பொருளாதார ரீதியாக ஆதரவு அளிக்கும் வகையில் இருப்பதால் தமிழக அரசுக்கு த.மா.கா சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News