செய்திகள்
அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

உள்ளாட்சி தேர்தல் குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Published On 2019-11-06 18:15 GMT   |   Update On 2019-11-06 18:15 GMT
வருகிற உள்ளாட்சி தேர்தல் குறித்து அ.தி.மு.க. சார்பில் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கெரகோடஅள்ளியில் நடைபெற்றது.
காரிமங்கலம்:

வருகிற உள்ளாட்சி தேர்தல் குறித்து அ.தி.மு.க. சார்பில் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கெரகோடஅள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் குமார் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் விருப்பு வெறுப்பின்றி கட்சி தலைமை அறிவிக்கும் வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். சொந்த கட்சி, கூட்டணி கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள வேட்பாளர்களின் வெற்றிக்காக அனைவரும் உழைக்க வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றிக்கு இந்த உள்ளாட்சி தேர்தல் முன் உதாரணமாக அமைய வேண்டும் என பேசினார்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட அவைத்தலைவர் நாகராசன், நகர செயலாளர் காந்தி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மாணிக்கம், கூட்டுறவு வங்கி தலைவர்கள் செந்தில் குமார், சந்திரன் மற்றும் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News