செய்திகள்
கோப்பு படம்.

சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.13 கோடிக்கு மது விற்பனை

Published On 2021-04-05 13:00 GMT   |   Update On 2021-04-05 13:00 GMT
சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை எதிரொலியாக நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.13 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.
சேலம்:

தமிழகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) சட்டமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் நேற்று முதல் நாளை வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் 220 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தினமும் சராசரியாக ரூ.5 கோடி முதல் ரூ.6 கோடி வரை மது விற்பனை நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவையொட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக நேற்று முன்தினம் பகல் முதல் இரவு வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபான விற்பனை ஜோராக நடந்தது. ஒரு சிலர் 3 நாட்களுக்கு தேவையான மது வகைகளை மொத்தமாக வாங்கி சென்றதையும் காணமுடிந்தது,

குறிப்பாக நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் 10 மணி வரை சேலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் வாங்க கூட்டம் அலைமோதியது.

இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் மது விற்பனை இரு மடங்கு அதிகரித்தது. இதனால் நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.13 கோடிக்கு மது விற்பனை நடைபெற்று உள்ளதாக மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அம்பாயிரநாதன் தெரிவித்தார்.
Tags:    

Similar News