உள்ளூர் செய்திகள்
கூட்டத்தில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பேசிய காட்சி.

கோவில்பட்டி நகராட்சியில் 36 வார்டுகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும்-கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பேச்சு

Published On 2022-01-20 10:52 GMT   |   Update On 2022-01-20 10:52 GMT
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவில்பட்டி நகராட்சியில் 36 வார்டுகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பேசினார்.
கோவில்பட்டி:

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. 

அந்த வகையில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவில் பின்புறமுள்ள மீரா திருமண மண்டபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாவட்டத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்று, தூத்துக்குடி மாவட்டத்தில் அ.தி.மு.க. தான் ஆளும் கட்சி என்பதனை நிரூபிக்க வேண்டும்.

அ.தி.மு.க.வினர் ஒற்றுமையுடன் செயல்பட்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற வேண்டும்.

தி.மு.க. தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்களிடம் இது பற்றி எடுத்துரைத்து வாக்கு சேகரிக்க வேண்டும். 

கோவில்பட்டி நகராட்சியை பொறுத்த வரை 36வார்டுகளிலும் அ.தி.மு.க. தலைமைக்கழகம் அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும். 

கோவில்பட்டி நகராட்சிக்கு புதிய கட்டிடம் அ.தி.மு.க. ஆட்சியில் தான் கட்டப்பட்டது. 

அந்த புதிய கட்டிடத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்தவர் தான் முதன் முதலில் தலைவராக அமர வேண்டும். இதற்காக அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News