செய்திகள்
கே பாலகிருஷ்ணன்

அ.தி.மு.கவை அழித்து தமிழகத்தில் பாஜக காலூன்ற முயற்சி- கே பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

Published On 2021-03-21 09:23 GMT   |   Update On 2021-03-21 09:23 GMT
கன்னியாகுமரியில் நடந்த பிரசாரத்தில் அதிமுக கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று அமித்ஷா கூறியுள்ளார். இதன்மூலம் தமிழகத்திற்கும், அந்த ஆபத்து வரஉள்ளது.

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுகின்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க போட்டியிட்டு பின்னர் அந்த கட்சியே இல்லாத நிலைக்கு கொண்டு சென்றுவிடும். கன்னியாகுமரியில் நடந்த பிரசாரத்தில் அ.தி.மு.க கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று அமித்ஷா கூறியுள்ளார். இதன்மூலம் தமிழகத்திற்கும், அந்த ஆபத்து வரஉள்ளது.

பீகாரில் நித்திஷ்குமாரின் ஆட்சியை சிறிய கட்சியாக மாற்றியது போல அஷாமில் அஷாம் கனபரிசத் கட்சியை உடைத்தது போல தமிழகத்திலும் அ.தி.மு.கவை அழிக்கும் நோக்கில் பா.ஜ.க காலூன்ற முயல்கிறது. பல்வேறு மாநிலங்களில் தாங்கள் நடத்திய வித்தைகளை தற்போது புதுச்சேரியிலும் நிகழ்த்தியுள்ளது.

இதன்மூலம் தமிழகத்தில் அ.தி.மு.கவுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயம், இடஒதுக்கீடு ஒழிப்பு, மின்சாரத்துறை தனியார் மயம் போன்ற பெருநிறுவனங்களுக்கு, பெரும் முதலாளிகளுக்கு மட்டுமே பா.ஜ.க அரசு சாதகமாக செயல்பட்டு வந்துள்ளது.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, வேளாண் திருத்தசட்டம் போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இதைப்பற்றி இதுவரை அ.தி.மு.க அரசு கண்டுகொள்ளாமல் தற்போது தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். ஆனால் மக்கள் அவர்களை நம்பமாட்டார்கள். அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணிக்கு மிகப்பெரிய சரிவு இந்த தேர்தலில் காத்திருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags:    

Similar News