ஆன்மிகம்
தஞ்சை பெரிய கோவில் முருகன் சன்னதி கோபுரம் சீரமைக்கும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.

தஞ்சை பெரியகோவிலில் முருகன் சன்னதி கோபுரம் சீரமைக்கும் பணி

Published On 2019-12-05 03:36 GMT   |   Update On 2019-12-05 03:36 GMT
கும்பாபிஷேகத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலில் உள்ள முருகன் சன்னதி கோபுரம் சீரமைக்கும் பணி நடைபெற்றது
தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது.

பெரியகோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

தஞ்சை பெரியகோவிலில் கும்பாபிஷேகம் 1996-ம் ஆண்டு நடைபெற்றது. தற்போது 24 ஆண்டுகளுக்குப்பிறகு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 1 ஆண்டாக பெரியகோவிலில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெரியகோவில் வளாகத்தில் உள்ள திருச்சுற்று மாளிகை சீரமைப்பு, சிதிலமடைந்த தரைதளம் சீரமைப்பு, கோபுரங்கள் சுத்தப்படுத்தும் பணி, புல்தளம் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்று முருகன் சன்னதி கோபுரம் சீரமைக்க சாரம் கட்டப்பட்டு பணிகள் நடைபெற்றது. இந்த சுத்தப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News