செய்திகள்
கோப்புபடம்

திருத்துறைப்பூண்டியில் 32 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - வியாபாரி கைது

Published On 2021-09-08 10:59 GMT   |   Update On 2021-09-08 10:59 GMT
திருத்துறைப்பூண்டியில் 32 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி போலீஸ் சரகத்திற்கு புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பதவியேற்றார். அப்போது இந்த பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.இந்தநிலையில் திருத்துறைப்பூண்டி பகுதியில் கடைகளுக்கு ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிைல பொருட்கள் கடைகளில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் யார் அவர்களுக்கு விற்பனை செய்வது என துணை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து திருத்துறைப்பூண்டி மருத்துவமனை தெருவில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்யும் பீடி மொத்த விற்பனையாளர் முகமது அப்துல்காதர் (வயது 62). விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து பீடிகட்டுகள் மொத்தமாக வைக்கும் குடோனுக்கு சென்ற துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட போலீசார் சென்று சோதனை செய்தனர். அப்போது ரூ.2 லட்சம் மதிப்பிலான 32 கிலோ புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகமது அப்துல்காதரை கைது செய்து, அவரிடம் இருந்த 32 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News