ஆன்மிகம்
பூலாம்பட்டி கூடக்கல் குப்பனூர் மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா

பூலாம்பட்டி கூடக்கல் குப்பனூர் மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா

Published On 2021-02-15 04:45 GMT   |   Update On 2021-02-15 04:45 GMT
பூலாம்பட்டி கூடக்கல் குப்பனூர் மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தீமிதி விழா நடந்தது. பெண்கள் உள்பட ஏராளமானோர் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பூலாம்பட்டி கூடக்கல் குப்பனூர் மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மதியம் தீமிதி விழா நடந்தது. இதையொட்டி காவிரி ஆற்றிலிருந்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து கோவில் முன்பு இருந்த தீக்குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். முதலில் பூசாரி இறங்கி வர அதனை தொடர்ந்து கரகம் எடுத்து வந்தவர்கள், கைக் குழந்தையை எடுத்து வந்தவர்கள், பெண்கள் உள்பட ஏராளமானோர் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து நண்பர்கள் குழு சார்பில் புலிவேஷம், பொய்க்கால் குதிரை, சாமி வேடங்கள் அணிந்து ஊர்வலமாக வந்தனர். அதைத்தொடர்ந்து பெண்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Tags:    

Similar News