செய்திகள்
தலிபான்கள்

பாகிஸ்தான் பணத்தில் வர்த்தகம் செய்ய முடியாது- ஆப்கானிஸ்தான் அறிவிப்பு

Published On 2021-09-13 05:24 GMT   |   Update On 2021-09-13 06:37 GMT
அமைச்சர் ‌ஷவ்கத்தரின் நிதி தொடர்பான செனட் நிலைக்குழுவிடம் ஆப்கானிஸ்தானுடன் வர்த்தகம் செய்ய தீர்மானிக்கபட்டால் பரிமாற்றத்தின்போது பாகிஸ்தான் பணத்தை பயன்படுத்தலாம்.

காபூல்:

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதை அடுத்து பாகிஸ்தான் அரசு அதற்கு பெரும் ஆதரவைத் தெரிவித்து வருகிறது.

இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் உள்பட அனைத்து பரிமாற்றங்களுக்கும் ஏற்பாடு செய்யவும் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் நிதி மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ‌ஷவ்கத்தரின் நிதி தொடர்பான செனட் நிலைக்குழுவிடம் ஆப்கானிஸ்தானுடன் வர்த்தகம் செய்ய தீர்மானிக்கபட்டால் பரிமாற்றத்தின்போது பாகிஸ்தான் பணத்தை பயன்படுத்தலாம். இது வெளிநாட்டு பணத்தை சேமிக்கவும், பணத்தை வலுப்படுத்தவும் உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து ஆப்கானிஸ்தான் கலாச்சார ஆணையத்தின் உறுப்பினர் அகமதுல்லா வாசிக் கூறியிருப்பதாவது:-

பாகிஸ்தான் பணத்தில் வர்த்தகம் செய்யப்படும் என்ற கருத்தில் எந்த உண்மையும் இல்லை. அண்டைய நாடுகளுக்கு இடையேயான பணபரிவர்த்தனம் ஆப்கானிஸ்தானுடையதாகவே இருக்கும். நாட்டு மக்களின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் எந்த முடிவும் தலிபான் எடுக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்... திண்டிவனத்தில் மூதாட்டிக்கு 3 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திய ஊழியர்கள்

Tags:    

Similar News