செய்திகள்
மார்கன்

மும்பை அணிக்கு எதிராக மெதுவாக பந்து வீச்சு - மார்கனுக்கு ரூ.24 லட்சம் அபராதம்

Published On 2021-09-24 09:12 GMT   |   Update On 2021-09-24 09:12 GMT
மும்பை அணிக்கு எதிராக மெதுவாக பந்து வீசியதால் கொல்கத்தா அணியில் உள்ள 10 வீரர்களுக்கும் தலா ரூ.6 லட்சத்துக்கும் குறைவாக அல்லது போட்டியில் இருந்து பெறும் பணத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும்.

அபுதாபி:

ஐ.பி.எல். போட்டியில் மும்பையை வீழ்த்தி கொல்கத்தா அணி 4-வது வெற்றியை பெற்றது.

அபுதாபியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 155 ரன் எடுத்தது. இதனால் கொல்கத்தாவுக்கு 156 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

குயிண்டன் டிகாக் அதிகபட்சமாக 42 பந்தில் 55 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ரோகித் சர்மா 33 ரன்னும் எடுத்தனர். பிரசித் கிருஷ்ணா, பெர்குசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

பின்னர் விளையாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 15.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாச்தில் அபார வெற்றி பெற்றது.

ராகுல் திரிபாதி 42 பந்தில் 74 ரன்னும் (8 பவுண்டரி, 3 சிக்சர்) வெங்கடேஷ் ஐயர் 30 பந்தில் 53 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

கொல்கத்தா அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். இதன்மூலம் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறியது. மும்பை அணி 5-வது தோல்வியை தழுவியது. இதனால் அந்த அணி 6-வது இடத்துக்கு பின் தங்கியது.

இந்த போட்டியில் கொல்கத்தா அணி மீது மெதுவாக பந்து வீசியதாக புகார் எழுந்தது. அவர்கள் நிர்யணிக்கப்பட்ட 20 ஓவர் வீசுவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டனர். மெதுவாக பந்து வீசியதற்காக கொல்கத்தா அணி கேப்டன் மார்கனுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

அதோடு அந்த அணியில் உள்ள மற்ற 10 வீரர்களுக்கும் தலா ரூ.6 லட்சத்துக்கும் குறைவாக அல்லது போட்டியில் இருந்து பெறும் பணத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும்.

Tags:    

Similar News