தொழில்நுட்பம்
ரியல்மி ஸ்மார்ட் டிவி

பத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி

Published On 2020-06-03 07:19 GMT   |   Update On 2020-06-03 07:19 GMT
ரியல்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட் டிவி முதல் விற்பனை துவங்கிய பத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.
 


ரியல்மி பிராண்டின் முதல் ஸ்மார்ட் டிவி மாடல் இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது.  நேற்று (ஜூன் 2 ) இதன் விற்பனை நடைபெற்றது. முதல் விற்பனை துவங்கிய பத்து நிமிடங்களில் சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிக ரியல்மி டிவிக்கள் விற்பனையாகி இருப்பதாக ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்தார்.

அந்த வகையில் வேகமாக விற்பனையான ஸ்மார்ட் டிவி மாடலாக ரியல்மி ஸ்மார்ட் டிவி இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ரியல்மி டிவிக்கான அடுத்த விற்பனை ஜூன் 9 ஆம் தேதி நடைபெறும் என அவர் தெரிவித்தார். இந்நிலையில், ரியல்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட் டிவி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.



இந்திய சந்தையில் விரைவில் 55 இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்திருக்கிறார்.

இத்துடன் ஸ்மார்ட் டிவி மாடல்களில் எஸ்எம்டி (அதாவது சர்ஃபேஸ் மவுண்ட் தொழில்நுட்பம்) துவங்க இருப்பதாகவும், இதற்கென பிரத்யேக உற்பத்தி பிரிவை கட்டமைப்பதற்கான முதலீடு செய்யப்பட்டு வருவதாக ரியல்மி தெரிவித்துள்ளது. எஸ்எம்டி வழிமுறையின் கீழ் பாகங்கள் நேரடியாக பிசிபி (அதாவது பிரின்ட்டெட் சர்கியூட் போர்டு ) மீது பொருத்தப்படும்.

ஏற்கனவே ரியல்மி ஸ்மார்ட்போன்களில் இந்த வழிமுறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரியல்மியின் புதிய 55 இன்ச் ஸ்மார்ட் டிவி பற்றிய விவரங்கள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News