செய்திகள்
வழக்கு

நன்கொடை கேட்டு மிரட்டியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 2 பேர் மீது வழக்கு

Published On 2020-11-07 06:50 GMT   |   Update On 2020-11-07 06:50 GMT
சங்கரன்கோவில் அருகே நன்கொடை கேட்டு மிரட்டியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்தவர் மாரிச்செல்வம் (வயது 30). இவர் சங்கரன்கோவில் நகர் பகுதிகளில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று சங்கரன்கோவில் புதுமனை தெரு பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனை அருகே வியாபாரம் செய்து கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட விவசாய அணி நிர்வாகி பால்சாமி மற்றும் தாலுகா நிர்வாகி அசோக்ராஜ் ஆகியோர் கட்சி நன்கொடையாக ரூ.500 கேட்டதாக கூறப்படுகிறது. 

அதற்கு மாரிச்செல்வம் ஏற்கனவே நகராட்சி குத்தகை பணம் கட்டிதான் தான் வியாபாரம் செய்து வருவதாகவும், தற்போது வியாபாரம் சரியில்லாததால் பணம் கொடுக்க முடியாது என கூறியதாகவும் தெரிகிறது. இதனால் அவரை அவதூறாக பேசி மிரட்டி ரூ.200 வசூலித்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்த புகாரின் பேரில் கட்சி நிர்வாகிகள் இருவர் மீதும் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News