செய்திகள்
மழை

தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

Published On 2020-09-26 09:50 GMT   |   Update On 2020-09-26 09:50 GMT
தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் 16 மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 10 செ.மீ., தேவகோட்டையில் 9 செ.மீ. மழை பதிவானது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News