தொழில்நுட்பம்

6 ஜி.பி. ரேம் கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-02-24 09:21 GMT   |   Update On 2019-02-24 09:21 GMT
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் 6 ஜி.பி. ரேம் கொண்ட நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #Nokia6Plus #Smartphone



ஹெச்.எம்.டி. குளோபல் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அறிமுகம் செய்தது. இந்தியாவில் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் தற்சமயம்  ரூ.15,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், 6 ஜி.பி. ரேம் கொண்ட நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனினை ஹெச்.எம்.டி. குளோபல் அறிமுகம் செய்துள்ளது.

முன்னதாக ஹெச்.எம்.டி. குளோபல் நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போனினை 4 ஜி.பி. மற்றும் 6 ஜி.பி. ரேம் வேரிண்ட்களில் அறிமுகம்  செய்தது. இதன் விலை முறையே ரூ.14,499 மற்றும் ரூ.16,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



நோக்கியா 6.1 பிளஸ் சிறப்பம்சங்கள்:

- 5.8 இன்ச் 2280x1080 பிக்சல் FHD பிளஸ் 19:9 ரக டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm சிப்செட்
- அட்ரினோ 509 GPU
- 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ், f/2.0, 1.0um பிக்சல், EIS
- 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, 1.2um பிக்சல்
- 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, 1.0um பிக்சல்
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3060 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- க்விக் சார்ஜ் 3.0
Tags:    

Similar News