தொழில்நுட்பம்
கேலக்ஸி எஸ்20

கேலக்ஸி எஸ்21 மாடலுடன் அந்த அம்சம் வழங்கப்படுவதாக தகவல்

Published On 2020-12-16 07:37 GMT   |   Update On 2020-12-16 07:37 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 மாடலுடன் அந்த அம்சம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சாம்சங் நிறுவனம் விரைவில் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போனி சீரிசை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கேலக்ஸி எஸ்21 சீரிஸ் விவரங்கள் இணையத்தில் பலமுறை வெளியாகி வருகிறது. இந்நிலையில் சாம்சங் மொபைல் பிரிவு தலைவர் டிஎம் ரோ புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் எஸ் பென் வசதியுடன் ஜனவரி மாத வாக்கில் அறிமுகமாகும் என ரோ தனது வலைதள பதிவில் தெரிவித்து உள்ளார். 2020 ஆம் ஆண்டு எங்களை ஆதரித்த அனைவருக்கும் நன்றி, ஜனவரி மாதம் மேலும் பல விஷயங்களை பகிர்ந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்21, கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா மற்றும் கேலக்ஸி எஸ்21 பிளஸ் என மூன்று மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் எஸ் பென் வசதி கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா அல்லது டாப் எண்ட் எஸ்21 ஸ்மார்ட்போனிற்கு மட்டும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

புதிய கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் விர்ச்சுவல் நிகழ்வு மூலம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய பிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. சர்வதேச  வெளியீட்டை தொடர்ந்து இந்த சீரிஸ் இந்தியாவிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News