ஆன்மிகம்
திருச்செந்தூருக்கு காவடி பாதயாத்திரை

நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு காவடி பாதயாத்திரை 16-ந் தேதி தொடங்குகிறது

Published On 2021-02-13 07:59 GMT   |   Update On 2021-02-13 07:59 GMT
நாகர்கோவில், நாகராஜா வழிபாட்டு பக்தர்கள் சார்பில் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் மாசி திருவிழா காவடி பாதயாத்திரை 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
நாகர்கோவில், நாகராஜா வழிபாட்டு பக்தர்கள் சார்பில் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் மாசி திருவிழா காவடி பாதயாத்திரை 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி நாகராஜா கோவில் பாலமுருகன் சன்னதியில் அன்று காலை 6 மணிக்கு காவடிக்கு வேல் அபிஷேகம், 7.30 மணிக்கு பஜனை, காவடி கலசத்தில் பன்னீர் நிரப்புதல், 9 மணிக்கு காவடி பாதயாத்திரை புறப்படுதல் போன்றவை நடக்கிறது.

பாதயாத்திரை அன்று இரவு வேப்பிலாங்குளம் அம்மன் கோவிலில் தங்குகிறது. மறுநாள் காலையில் அங்கிருந்து புறப்பட்டு இரவு இட்டமொழி வடபத்திரகாளி அம்மன் கோவிலிலும், 18-ந் தேதி இரவு பரமக்குறிச்சி கருப்பசாமி கோவில் வளாகத்திலும் தங்குகிறது. 19-ந் தேதி திருச்செந்தூர் சென்றடைந்து காலை 8.30 மணிக்கு திருச்செந்தூர் கோவிலில் காவடி செலுத்துதல், காவடிக்கு அன்னபடைப்பு, மதியம் 2 மணிக்கு இடும்பன் பூஜை, தீபாராதனை போன்றவை நடைபெறும்.
Tags:    

Similar News