செய்திகள்
ரோகித் சர்மா

முதல் டெஸ்ட்: 2-ம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 97/1

Published On 2021-08-05 12:33 GMT   |   Update On 2021-08-05 12:33 GMT
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம் நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா 36 ரன்னில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
நாட்டிங்காம்:

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது. அந்த அணி முதல் இன்னிங்சில் 183 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இதனையடுத்து முதல் இன்னிங்சை இந்திய அணி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா - கேஎல் ராகுல் ஜோடி களமிறங்கியது. முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் -ராகுல் தலா 9 ரன்கள் எடுத்திருந்தனர்.

2-ம் நாளான இன்று மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ரோகித்-ராகுல் இருவரும் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டனர். அவ்வப்போது பவுண்டரிகளை பறக்கவிட்டனர். சிறப்பாக ஆடி வந்த ரோகித் சர்மா 107 பந்துகளில் 36 ரன்கள் எடுத்த போது ராபின்சன் ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார். பவுன்சர் பந்தை அடித்ததால் தனது விக்கெட்டை ரோகித் சர்மா இழந்தார். உணவு இடைவேளை வரை இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்திருந்தது. கேஎல் ராகுல் 124 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். 
Tags:    

Similar News