ஆன்மிகம்
சக்கரவாகேஸ்வரர் கோவில் சப்தஸ்தான விழாவில் சாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.

சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் சப்தஸ்தான விழா

Published On 2021-04-02 06:02 GMT   |   Update On 2021-04-02 06:02 GMT
அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் சப்தஸ்தான விழாவில் பொம்மைக்கு பூப்போடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளியில் சக்கரவாகேஸ்வரர் கோவில் உள்ளது. சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலின் இணை கோவிலும் திருஞான சம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமுமான இக்கோவிலில் சப்தஸ்தான விழாவை முன்னிட்டு கடந்த 30-ந் தேதி ஏழூர் பல்லக்கு புறப்பட்டது. இந்த பல்லக்கு அய்யம்பேட்டை, வழுத்தூர், சரபோஜிராஜபுரம், அரியமங்கை, சூலமங்கலம், நல்லிச்சேரி, பசுபதி கோவில், இலுப்பக்கோரை ஆகிய ஊர்களில் வலம் வந்து அந்தந்த ஊர் பல்லக்குகளுடன் நேற்றுமுன்தினம் இரவு அய்யம்பேட்டை வந்தடைந்து.

தொடர்ந்து மதகடி பஜார் அருகில் உள்ள அழகு நாச்சியம்மன் கோவில் முன்பாக சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பல்லக்கு கோவிலை சென்றடைந்தது.

விழா ஏற்பாடுகளை சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவில் நிர்வாகிகள், ஏழூர் கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் மேற்பார்வையில் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த் தலைமையில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான போலீசார் செய்திருந்தனர்.
Tags:    

Similar News