செய்திகள்
சத்தான உணவுகள்

கொரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள்

Published On 2021-04-21 07:18 GMT   |   Update On 2021-04-21 07:18 GMT
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் 3 வேளையும் வழங்கப்படுகிறது.

சென்னை:

சென்னையில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நோய் பாதிப்பு தன்மையின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு கண்காணிப்பும் ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. தீவிர தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் மற்றும் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை வழங்கப்படுகிறது.

ராஜீவ்காந்தி, ஓமந்தூரார், ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், கிண்டி கிங் மருத்துவமனை கஸ்தூரிபாய் மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை, மகப்பேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் 3 வேளையும் வழங்கப்படுகிறது.

காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை காலம் நேரம் வாரியாக உணவுகளை பிரித்து வழங்குகிறார்கள். காலை 7 மணிக்கு இஞ்சி தோலுடன் கூடிய எலுமிச்சை கொதிக்க வைத்த நீர் 200 மி.லி, காலை 8 மணிக்கு இட்லி அல்லது நவகிச்சடி, சேமியா கிச்சடி அல்லது சம்பா கோதுமை ரவை கிச்சடி கொடுக்கிறார்கள்.

அவற்றுடன் சாம்பார், தக்காளி, வெங்காய சட்னி, அவித்த முட்டை, பால் (200 மி.லி.) வழங்குகிறார்கள்.

காலை 10 மணிக்கு சாத்துக்குடி ஜூஸ் (250 மி.லி.), 11 மணிக்கு இஞ்சி தோலுடன் கூடிய எலுமிச்சை கொதிக்க வைத்த நீர், மிளகுத்தூள் கலந்த வெள்ளரிக்காயும் வழங்கப்படுகிறது.

மதியம் 1 மணிக்கு சப்பாத்தி (2), காய்கறி சாதம் அல்லது புதினா சாதம், வெஜ் பிரைட் ரைஸ், கீரை பொறியல், காய்கறி பொறியல், ரசம், பொட்டுக்கடலை (50கி). கொடுக்கப்படுகிறது.

மதியம் 3 மணிக்கு மஞ்சளுடன் மிளகுத்தூள் கலந்த சுடுநீர், மாலை 5 மணிக்கு சிறுபருப்பு, மிளகு கலந்த சூப், அவித்த சுண்டல், மிளகு.

இரவு 7 மணிக்கு சப்பாத்தி அல்லது இட்லி, ரவை கிச்சடி அல்லது சேமியா கிச்சடி, சம்பா கோதுமை ரவை கிச்சடி, வெஜ்குருமா, வெங்காய சட்னி மற்றும் பால் (250 மி.லி) வழங்கப்படுகிறது.

இரவு 9 மணிக்கு இஞ்சி தோலுடன் கூடிய எலுமிச்சை கொதிக்க வைத்த நீர் 11 மணிக்கு மஞ்சளுடன் மிளகுத்தூள் கலந்த சுடுநீர் ஒவ்வொரு நோயாளிகளுக்கும் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News