வழிபாடு
காரமடை அரங்கநாதர் கோவில்

காரமடை அரங்கநாதர் கோவிலில் ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சிகளை மீண்டும் நடத்த கோரிக்கை

Published On 2022-01-01 08:48 GMT   |   Update On 2022-01-01 08:48 GMT
காரமடை அரங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழாவில் ரத்து செய்யப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் மீண்டும் நடத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
காரமடை மத்திய ஒன்றிய பா.ஜ.க. தலைவர் விக்னேஷ், பா.ஜனதாவினர் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும், காரமடை அரங்கநாதர் கோவில் செயல் அலுவலருக்கும் மனு அனுப்பியுள்ளார்.

அந்த மனுவில், கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற வைணவ தலங்களில் காரமடை அரங்கநாதர் கோவிலும் ஒன்றாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறும். தற்போது கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மண்டப கட்டளை பூஜைகளை கோவில் நிர்வாகம் ரத்து செய்தது. மேலும் கோவிலில் சடாரி வைப்பது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழாவில் ரத்து செய்யப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் மீண்டும் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
Tags:    

Similar News