செய்திகள்
ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசிய காட்சி.

ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும்- ஈஸ்வரன் பேட்டி

Published On 2021-01-04 14:11 GMT   |   Update On 2021-01-04 14:11 GMT
சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
ஆத்தூர்:

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தில் ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகிறார்கள். அவர்களது போராட்டம் வெற்றி பெறும். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் தான் நீடித்து வருகிறது. 72 தொகுதிகளில் எங்கள் கட்சியின் செயல்பாடுகள் இருந்து வருகிறது. எங்கள் கட்சியின் தகுதிக்கேற்ப தொகுதிகள் சட்டமன்ற தேர்தலில் வழங்கப்படும். எந்த சின்னத்தில் போட்டியிடுவது குறித்து தேர்தலின்போது முடிவு செய்வோம்.

சேலம் மாவட்டம் பெரிய மாவட்டமாக உள்ளது. சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும். 

இவ்வாறு ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.
Tags:    

Similar News