உள்ளூர் செய்திகள்
சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு பழக்கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்த காட்சி.

செயற்கை முறையில் பழுக்க வைத்த 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்- உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி

Published On 2022-05-06 10:03 GMT   |   Update On 2022-05-06 10:03 GMT
நெல்லை சந்திப்பில் செயற்கை முறையில் பழுக்க வைத்த 500 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நெல்லை:

நெல்லை சந்திப்பு கண்ணம்மன் கோவில் தெரு பகுதியில் மொத்த வியாபார பழக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து சில்லரை வியாபாரிகள், பொதுமக்கள் பழங்களை வாங்கி செல்கிறார்கள்.

இந்நிலையில் இந்த கடைகளில் செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்கப்படுவதாக புகார் வந்தது.

இதையடுத்து நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சங்கரலிங்கம் தலைமையிலான குழுவினர் அப்பகுதிக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ரசாயன முறையில் பழுக்க வைத்த 500 கிலோ மாம்பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.  அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து சந்திப்பு பகுதியில் உள்ள பல்வேறு கடைகளிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

நேற்று நெல்லையில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் சவர்மா சிக்கன்கள் தரமனதாக என்பது குறித்து ஆய்வு செய்னதர். இந்நிலையில் இன்று பழக்கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News