தொழில்நுட்பம்
ஆப்பிள்

ஐபோன் விற்பனையில் அசுர வளர்ச்சியை பதிவு செய்த ஆப்பிள்

Published On 2021-07-28 11:29 GMT   |   Update On 2021-07-29 04:07 GMT
ஆப்பிள் நிறுவனம் மூன்றாவது காலாண்டிற்கான வருவாய் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.


ஆப்பிள் நிறுவனத்தின் கடந்த காலாண்டு வருவாய் அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி ஆப்பிள் நிறுவனத்தின் லாபம் இந்திய மதிப்பில் ரூ. 1,61,588 கோடிகளாக அதிகரித்து இருக்கிறது. ஐபோன் மற்றும் டிஜிட்டல் சேவைகளின் விற்பனையே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

ஆப்பிள் நிறுவன வருவாய் வருடாந்திர அடிப்படையில் 36 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. ஐபோன் வருவாய் 50 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இவற்றுடன் மேக் மற்றும் ஐபேட் மாடல்களின் விற்பனையும் வருடாந்திர அடிப்படையில் அதிகரித்து இருக்கிறது. 



அதிக பிரபலம் இல்லாத ஆப்பிள் நிறுவனத்தின் 'இதர பொருட்கள்' பரிவு விற்பனையும் வருடாந்திர அடிப்படையில் 40 சதவீதம் வளர்ச்சி பெற்று இருக்கிறது. இந்த பிரிவில் ஏர்பாட்ஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் விற்பனையில் கணிசமான பங்குகளை பெற்றுள்ளன.

கொரோனா பெருந்தொற்றில் இருந்து உலகின் பல்வேறு நாடுகள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருவது, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படுவதே ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது. இத்துடன் புது ஸ்மார்ட்போன் வாங்குவோரில் பலர் 5ஜி சாதனங்களை வாங்க திட்டமிட்டதும் ஐபோன் விற்பனை வளர்ச்சிக்கு காரணம் ஆகும். 

Tags:    

Similar News