லைஃப்ஸ்டைல்
தயிர் வெஜிடபிள் சாண்ட்விச்

தயிர் வெஜிடபிள் சாண்ட்விச்

Published On 2021-01-28 05:24 GMT   |   Update On 2021-01-28 05:24 GMT
குழந்தைகளை ஈஸியாக மடக்க அவர்களுக்கு பிடித்த உணவை செய்து கொடுத்து அசத்துங்கள். அதுவும் தயிர் சாண்ட்விச்னா குழந்தைகளுக்கு ரொம்ப இஷ்டம். சரி வாங்க தயிர் சாண்ட்விச்சை எப்படி செய்றதுனு பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:

கோதுமை பிரெட் - 4
தயிர் - 1 கப்
ஸ்வீட் கார்ன்  - 1/4 கப்
முட்டைக்கோஸ் - 1/4 கப்
கேரட் - 1/4 கப்
குடைமிளகாய் - 1/4 கப்
தேன் - தேவையான அளவு
உப்பு - தேவியான அளவு
மிளகு - தேவையான அளவு

செய்முறை:

முட்டைக்கோஸ், கேரட், குடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தயிரில் சிறிதும் தண்ணீர் இல்லாமல் நீக்கி கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் தயிரை போட்டு அதனுடன் சோளம், முட்டைக்கோஸ், கேரட், குடை மிளகாய் போன்றவற்றை ஒன்றுடன் ஒன்று சேரும் வரை நன்கு கலந்து கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் தேன், உப்பு, மிளகு ஆகியவை சேர்த்து கலந்து அதை தயிர் கலவையுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

கோதுமை பிரெட்டின் ஓரங்களை நீக்கி விட்டு கலந்த தயிர் கலவையை வைக்கவும்.

அதன் மேல் இன்னொரு பிரெட்டை வைத்து மூடினால் சுவையான தயிர் சாண்ட்விச் தயார்.

இதனை தக்காளி சாஸுடன் சாப்பிடால் கலக்கல் டேஸ்ட்டாக இருக்கும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News