செய்திகள்
திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் விளக்கேற்றி அம்மனை வழிபட்ட பெண்கள்.

ஆடி 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் பெண்கள் விளக்கேற்றி வழிபாடு

Published On 2021-07-30 11:34 GMT   |   Update On 2021-07-30 11:34 GMT
ஆடி கிருத்திகையையொட்டி 2-ந்தேதி சிறப்பு பூஜையும், 3-ந்தேதி ஆடி பெருக்கன்று ஷோடச அபிஷேகம், மகா தீபாராதனை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
திருப்பூர்:
 
ஆடி 2-ம் வெள்ளிக்கிழமையையொட்டி திருப்பூர் மாநகர் பகுதியில் உள்ள  பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில், பெருமாநல்லூர் குண்டத்து காளியம்மன் கோவில், மேட்டுப்பாளையம் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், செரீப் காலனியில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது.

இதே போல் உடுமலை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு  நடைபெற்றது.  இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று  சாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து ஆடி கிருத்திகையையொட்டி 2-ந்தேதி சிறப்பு பூஜையும், 3-ந்தேதி ஆடி பெருக்கன்று காலை 7 மணிக்கு ஷோடச அபிஷேகம், மகா தீபாராதனை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. 

இதே போல் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது.  ஆடிமாதத்தில் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் கோவில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. 

இதனால் பக்தர்கள் காப்பு கட்டுவது, விரதம் இருப்பது போன்ற வழிபாட்டு முறைகளை செய்யமுடியவில்லை. எனவே திருவிழாக்கள் நடத்திட அனுமதி அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News