செய்திகள்
மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத்

இந்தியாவிற்கு வரும் தபால் சேவைகளை நிறுத்திய பாகிஸ்தானுக்கு மத்திய மந்திரி கண்டனம்

Published On 2019-10-21 10:31 GMT   |   Update On 2019-10-21 10:31 GMT
இந்தியாவிற்கு வரும் தபால் சேவைகளை தன்னிச்சையாக நிறுத்திய பாகிஸ்தானுக்கு மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: 

இந்தியா பாகிஸ்தான் இடையே பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருகின்றன. போர் நெறிமுறைகளை மீறி பாகிஸ்தான்,  எல்லைப்பகுதியில்  தாக்குதல்களை  நடத்தி வருகிறது. அதற்கு தகுந்த வகையில் இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவிற்கு வரும் தபால் சேவைகளை தன்னிச்சையாக நிறுத்தியுள்ள பாகிஸ்தான் அரசின் செயலுக்கு மத்திய மந்திரி  ரவி சங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார். 

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் இதுகுறித்து தெரிவிக்கையில், ‘‘எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பாகிஸ்தான், தபால் துறையின் கடிதங்களை இந்தியாவுக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டது. பாகிஸ்தானின் இந்த முடிவு சர்வதேச அஞ்சல் தொழிற்சங்க விதிமுறைகளுக்கு முரணானது’’ என்றார்.
Tags:    

Similar News