ஆட்டோமொபைல்
டாடா மோட்டார்ஸ்

இரண்டு பெரிய வெளியீடுகள் - டாடாவின் அசத்தல் திட்டம்

Published On 2021-08-17 08:21 GMT   |   Update On 2021-08-17 08:21 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிறிய எஸ்.யு.வி. மாடல் விரைவில் அந்த பெயரில் வெளியாக இருக்கிறது.


டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய மைக்ரோ எஸ்.யு.வி. ஹான்பில் என அழைக்கப்படுகிறது. இந்திய சந்தையில் டாடா நிறுவனத்தின் மிகச் சிறிய எஸ்.யு.வி. மாடலாக ஹான்பில் உருவாகி இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஹான்பில் மைக்ரோ எஸ்.யு.வி. இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.

“இந்த ஆண்டில் ஏற்கனவே நான்கு மாதங்கள் கழிந்துவிட்டன. தற்போது சந்தையில் டாடா மோட்டார்ஸ் பங்கு 10.3 சதவீதமாக இருக்கிறது. மேலும், ஹான்பில் உள்பட இரண்டு பெரிய வெளியீடுகளுக்கு திட்டமிட்டுள்ளோம்.” என டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன வியாபார பிரிவு தலைவர் சைலேஷ் சந்திரா தெரிவித்தார். 



மஹிந்திரா கே.யு.வி. 100 மற்றும் மாருதி சுசுகி இக்னிஸ் மாடல்கள் அடங்கிய மிட்-லெவல் பி பிரிவில் ஹான்பில் மாடல் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் ஹான்பில் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த மாடல் ஹெச்.பி.எக்ஸ். கான்செப்ட் எனும் பெயரில் காட்சிப்படுத்தப்பட்டது.

டாடா ஹான்பில் அந்நிறுவனத்தின் ஆல்பா பிளாட்பார்மில் உருவாகும் இரண்டாவது கார் ஆகும். முன்னதாக அல்ட்ரோஸ் ஹேட்ச்பேக் மாடல் ஆல்பா பிளாட்பார்மின் முதல் மாடலாக இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது.

Tags:    

Similar News