செய்திகள்
முகக்கவசம்

தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாமல் சுற்றிய 7½ லட்சம் பேர் சிக்கினர்

Published On 2021-05-05 11:31 GMT   |   Update On 2021-05-05 11:31 GMT
கடந்த மாதம் 8-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு கொரோனா பரவ தொடங்கிய நாளில் இருந்து முகக்கவசம் அணியாமல் வெளியில் சுற்றியவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்த போதிலும் இடையில் அதனை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

இந்தநிலையில் கடந்த மாதம் 8-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதன்படி 27 நாட்களில் 7½ லட்சம் பேர் முகக்கவசம் அணியாமல் பிடிபட்டுள்ளனர். இவர்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் அபராதம் விதிக்கப்பட்டது.

அதிகபட்சமாக தெற்கு மண்டலத்தில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 342 பேர் பிடிபட்டுள்ளனர். வடக்கு மண்டலத்தில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 59 பேர் சிக்கியுள்ளனர்.

மேற்கு மற்றும் மத்திய மண்டலங்களிலும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் முகக்கவசம் அணியாமல் பிடிபட்டனர்.

இதே போன்று சமூக இடைவெளியை கடைபிடிக்காத குற்றத்திற்கு கடந்த 27 நாளில் 23 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags:    

Similar News