உள்ளூர் செய்திகள்
கூட்டத்தில் கலந்து கொண்வர்களை படத்தில் காணலாம்.

பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம்

Published On 2022-05-07 09:58 GMT   |   Update On 2022-05-07 09:58 GMT
பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பாலக்கோடு, 

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றி கவுன்சிலர்கள் ஆலோசனை  கூட்டம் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் வரவு செலவு கணக்குகளை அதிகாரிகள் எடுத்துரைத்தனர் . இந்த கூட்டத்தில் ஓகேனக்கல் குடிநீர் முறையாக விநியோகிக்கவும், புளேரைடு இல்லாத குடிநீரை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். 

கழிவு நீர் கால்வாய் இல்லாத பகுதிக்கு கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டியும், ஒன்றியத்திற்கு போதிய நிதி இல்லாததால் பொது மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை இருப்பதால், போதிய நிதியை மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சியில் உள்ள சமுதாய திருமண மண்டபங்களுக்கு தேவையான மின்சாரம், ஆழ்துளை கிணறு, சமையல் பாத்திரங்கள், குடிநீர் வசதி, உணவருந்தும் டேபிள், சேர் உள்ளிட்டவைகளை உடனடியாக வழங்க வேண்டும்.

மேலும் வெட்டி முடிக்கப்பட்ட 8 பொதுவெளி கிணறுகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
இந்த நிகழ்ச்சியில் சேர்மன் பாஞ்சாலை  கோபால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், ரவி  மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள்  கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News