செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்

கா‌‌ஷ்மீரில் காவலில் வைக்கப்பட்டிருந்த 2 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2019-11-29 19:46 GMT   |   Update On 2019-11-29 19:46 GMT
கா‌‌ஷ்மீரில் காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் எம்.எல்.ஏ அலி முகமது சாகர், எம்.எல்.ஏ. இ‌‌ஷ்பாக் அகமது ஆகியோர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
ஸ்ரீநகர்:

கா‌‌ஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்து, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றி மத்திய அரசு கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி அதிரடி நடவடிக்கை எடுத்தது. அதைத் தொடர்ந்து கா‌‌ஷ்மீரில் முன்னாள் முதல்-மந்திரிகள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா மற்றும் அரசியல்வாதிகள் பலரும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

அப்படி சிறை வைக்கப்பட்டிருந்த தேசிய மாநாடு கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அலி முகமது சாகர், மற்றொரு முன்னாள் எம்.எல்.ஏ. இ‌‌ஷ்பாக் அகமது ஆகியோரின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, சவுராவில் உள்ள ஷெர் இ கா‌‌ஷ்மீர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

அவர்களுக்கு இதய பரிசோதனைகள் நடத்தப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

கா‌‌ஷ்மீரில் தற்போது உயிரை உறைய வைக்கும் குளிர் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News