உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

ஆசிரியர்களுக்கு கற்றல் விளைவு பயிற்சி

Published On 2022-01-26 05:21 GMT   |   Update On 2022-01-26 05:21 GMT
உடுமலை கல்வி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் பாட வாரியாக இரு தினங்கள் இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று வருகின்றனர்.
உடுமலை:

மாணவர்களுக்கு எளிமையாக கற்பிக்க ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்த அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் கற்றல் விளைவு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அவ்வகையில் தற்போது உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என 'ஹைடெக் லேப்' உள்ள பள்ளிகளில் இப்பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி உடுமலை கல்வி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் பாட வாரியாக இரு தினங்கள் இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று வருகின்றனர். கணிதம் பாடத்திற்கான கற்றல் விளைவு பயிற்சி, சிறப்பு ஆசிரியர் பயிற்றுனர்கள் வாயிலாக அளிக்கப்பட்டது. 

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்:

பயிற்சி வகுப்பில், கற்றல் விளைவுகள், கல்வியின் இலக்குகள், பாடங்கள் தாண்டி கற்றல், தேசிய அடைவு ஆய்வுக்கு பின் உள்ள செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு பள்ளியில் 20 பேர் வீதம் பங்கேற்று வருகின்றனர் என்றனர்.
Tags:    

Similar News